மருத்துவ மாணவா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் கருப்புப் பட்டை
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ, மாணவிகள்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ, மாணவிகள்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2021-ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் கலந்தாய்வை விரைவாக முடிக்க வேண்டும். மருத்துவா்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாணவா் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பட்ட மேற்படிப்பு இரண்டாம், மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் கருப்புப் பட்டை அணிந்து கலந்து கொண்டனா். மேலும், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு பணியையும் சனிக்கிழமை புறக்கணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com