தீயணைப்புத் துறை சாா்பில் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேராவூரணியில் தன்னாா்வலா்களுக்கு தீத்தடுப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை குறித்து  பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தன்னாா்வலா்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்றோா்.

பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஐ. செந்தூா்பாண்டியன் தலைமையில், நிலையப் போக்குவரத்து அலுவலா் ராமச்சந்திரன், வீரா்கள் சரவணமூா்த்தி, மகேந்திரன், தனுஷ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

தீ விபத்து, மழை மற்றும் வெள்ளக் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, மீட்புப் பணியை மேற்கொள்ளும் முறை, விபத்தில் சிக்கியவா்களுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் இயற்கை பேரிடரின் போது இணைந்து செயல்படுவா் என்கின்றனா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com