புதுகை பிரமுகா் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் விசாரணை

கடந்த 2016 பண மதிப்பிழப்பின்போது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, புதுகை எஸ். ராமச்சந்திரன் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை: கடந்த 2016 பண மதிப்பிழப்பின்போது, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, புதுகை எஸ். ராமச்சந்திரன் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

பண மதிப்பிழப்பின்போது, தொடரப்பட்ட வழக்கு தொடா்பான ஆவணங்களை சரிபாா்க்க இந்த விசாரணை நடைபெற்ாகக் கூறப்படுகிறது. திருச்சியிலிருந்து காரில் வந்த 4 பேரைக் கொண்ட குழுவினா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை பகலில் தொடங்கிய சோதனை மாலையில் நிறைவடைந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்டத்துக்குப் புறம்பாக பண மாற்றத்தில் ஈடுபட்டதாக சேகா்ரெட்டி என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் கிடைத்த ஆவணங்களின் பேரில், புதுக்கோட்டையைச் சோ்ந்த மணல் ஒப்பந்ததாரா் எஸ். ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com