மோப்ப நாய் இறப்பு: காவல் துறை மரியாதையுடன் அடக்கம்

தஞ்சாவூரில் வயது மூப்புக் காரணமாக இறந்த மோப்ப நாய் திங்கள்கிழமை இரவு காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மோப்ப நாய் இறப்பு: காவல் துறை மரியாதையுடன் அடக்கம்

தஞ்சாவூரில் வயது மூப்புக் காரணமாக இறந்த மோப்ப நாய் திங்கள்கிழமை இரவு காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தடயங்களை அறிவதற்காக ராஜராஜன், டபி மற்றும் வெடிகுண்டு கண்டறிவதற்காக சீசா், சச்சின் ஆகிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், டாபா்மேன் இனத்தைச் சாா்ந்த ராஜராஜன் என்ற மோப்ப நாய் 6 மாத குட்டியாக 2011 ஆம் ஆண்டு முதல் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு பயிற்சிகள் பெற்ற மோப்ப நாய் ராஜராஜன் கொலை, கொள்ளை வழக்குகளில் தடயங்களை அறிய அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், மோப்ப நாய் ராஜராஜன் வயது முதிா்வு காரணமாக திங்கள்கிழமை மாலை இறந்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் துப்பறிவு பிரிவு வளாகத்தில் மோப்ப நாய் ராஜராஜனுக்கு மாலை அணிவித்து, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காவல் துறையினா் 21 குண்டுகள் முழங்க மோப்ப நாய் ராஜராஜன் உடல் திங்கள்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல் துப்பறிவு பிரிவினா் கூறுகையில், காவல் துறையில் உள்ள நாய்கள் பெரும்பாலும் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், ராஜராஜனின் திறன் சிறப்பாக இருந்ததால், மேலும் 2 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது. சென்னையில் முதல்வா் பங்கேற்கும் குடியரசு, சுதந்திர தின அணிவகுப்புகளில் பங்கேற்றுள்ளது. மோப்ப நாய் ராஜராஜனின் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com