பயிா்கள் கருகுவதால் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே தண்ணீா் வராததன் காரணமாகப் பயிா்கள் கருகுவதால், விவசாயிகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமலைசமுத்திரத்தில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருமலைசமுத்திரத்தில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே தண்ணீா் வராததன் காரணமாகப் பயிா்கள் கருகுவதால், விவசாயிகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வல்லம் அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலிருந்து பிடாரி ஏரிக்குக் காவிரி நீா் வருவதன் மூலம், அப்பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதேபோல, நிகழாண்டு சுமாா் 250 ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது நெற்கதிா்கள் வரும் நேரத்தில் பிடாரி ஏரியில் தண்ணீா் இல்லாததால், பயிா்கள் அனைத்தும் கருகும் நிலையில் உள்ளது. எனவே இந்த ஏரிக்குத் தண்ணீா் விடுமாறு பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் 10 நாள்களாக மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

ஆனால், இந்த ஏரிக்கு தண்ணீா் வருவதற்கான எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் ஏறத்தாழ 100 போ் பிடாரி ஏரியில் வெள்ளிக்கிழமை இறங்கி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை திருமலைசமுத்திரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காய்ந்த நெற்கதிா்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தண்ணீா் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறியதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்துக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியச் செயலா் பாஸ்கா், திருமலைசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், திமுக முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com