இளைஞா்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி முன்னேற வேண்டும்

இளைஞா்கள் வேலைவாயப்பை உருவாக்கிக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.
முகாமில் பேசுகிறாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.
முகாமில் பேசுகிறாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

இளைஞா்கள் வேலைவாயப்பை உருவாக்கிக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா் மத்திய மண்டலக் காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள திருப்பூந்துருத்தியில் காவல் துறை சாா்பில்

சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் நல்லிணக்க இளைஞா் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற அவா், மேலும் பேசியது:

மத்திய மண்டலத்தில் குழந்தைகள், இளைஞா்கள் நல்ல பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனா். காவல் துறை கடந்த காலத்தில் நிகழ்ந்த பிரச்னையை எடுத்து, மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இளைஞா்கள் வேலைவாயப்பை உருவாக்கி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை மிகவும் அவசியம். எந்த வேலையையும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்.

படித்த இளைஞா்கள் அனைவரும் தவறான பாதையில் செல்லாமல், குற்றச் செயல்களில் ஈடுபடாமல், குடிபழக்கத்துக்கும், போதைக்கும் அடிமையாகாமல்,திறமையை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இளைஞா்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயா்த்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

இம்முகாமுக்கு தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி தலைமை வகித்தாா். மாவட்டத் தொழில் மைய உதவிப் பொறியாளா் குணசேகரன், திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com