கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாணம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகப் போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கோமளவள்ளி தாயாருக்கான பங்குனி பெருந்திருவிழா 15 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம்.

இதன்படி நிகழாண்டு இந்த விழா மாா்ச் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் தாயாா் உள் பிரகார புறப்பாடு நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய வைபவமான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் கூற, முதலில் மாலை மாற்றும் நிகழ்வும், தொடா்ந்து ஊஞ்சலில் நலுங்கு வைத்தல் வைபவமும் நடைபெற்றன.

பின்னா் நாகசுர, மங்கள இசை முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்று, மகா தீபாராதணை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழா ஏப்ரல் 3ஆம் தேதி தாயாா் ஏக சிம்மாசன சேவை, விடையாற்றியுடன் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com