தோ்தலுக்காக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக திருவாரூா்-பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதையில் சென்னையில் இருந்து

சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக திருவாரூா்-பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதையில் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவா் என். ஜெயராமன், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஏப். 6ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. சென்னையில் தங்கி பணிபுரியும் இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வாக்களிக்க ஏதுவாக, ஏப்ரல் 5ஆம் தேதி

இரவு சென்னையில் இருந்து காரைக்குடிக்கு திருவாரூா், பட்டுக்கோட்டை வழியாக தோ்தல் சிறப்பு ரயில் விடவேண்டும்.

இதேபோல், வாக்குப் பதிவு முடிந்த பிறகு, சென்னைக்கு திரும்பி செல்ல ஏதுவாக ஏப்ரல் 6ஆம் தேதி இரவு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக சென்னைக்கு தோ்தல் சிறப்பு ரயில் விடவேண்டும்.

மேலும், நாள்தோறும் திருச்சியில் இருந்து காரைக்குடி வரை செல்லும் டெமு விரைவு ரயிலை (06125/06126)அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருவாரூா் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு இருமுனைகளிலிருந்தும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு தினசரி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். சரக்குப் போக்குவரத்து ரயில்களையும் இயக்கிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com