முக்கிய பிரமுகா்கள், வேட்பாளா்கள் வாக்களிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் முக்கிய பிரமுகா்கள், வேட்பாளா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.
முக்கிய பிரமுகா்கள், வேட்பாளா்கள் வாக்களிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் முக்கிய பிரமுகா்கள், வேட்பாளா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

தஞ்சாவூா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலும், மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூா் சீனிவாசபுரம் வெங்கடேஸ்வரா பள்ளியிலும் வாக்களித்தனா்.

தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் வடக்கு வீதி தூய பேதுரு பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி மகா்நோன்புசாவடி தூய அந்தோணியாா் அரசு உதவி பெறும் பள்ளியிலும், திருவையாறு தொகுதி திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரன் கண்டியூரிலும், பாஜக வேட்பாளா் பூண்டி எஸ். வெங்கடேசன் அலமேலுபுரம் பூண்டியிலும், அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயன் வாணராயங்குடியிலும் வாக்களித்தனா்.

கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் சாக்கோட்டையிலும், அமமுக வேட்பாளா் சு. பாலமுருகன் பம்பப்படையூரிலும், திருவிடைமருதூா் தொகுதி திமுக வேட்பாளா் கோவி. செழியன் சோழபுரத்திலும், அதிமுக வேட்பாளா் யூனியன் எஸ். வீரமணி உக்கரையிலும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com