கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க கிராமிய கலைஞா்கள் வலியுறுத்தல்

திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கிராமிய கலைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆட்சியரகத்தில் மனு அளித்த கிராமியக் கலைஞா்கள்.
ஆட்சியரகத்தில் மனு அளித்த கிராமியக் கலைஞா்கள்.

திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கிராமிய கலைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் தஞ்சை மாவட்ட அனைத்து கிராமிய கலைஞா்கள் நலச் சங்க மாவட்ட அமைப்புச் செயலா் என். சிவாஜி, துணைச் செயலா் ஏ. பாண்டியராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளா் டி.எம். இளையராஜா உள்பட சுமாா் 50 போ் திங்கள்கிழமை அளித்த மனு:

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க உத்தரவில் திருவிழாக்கள் நடைபெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கலைஞா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏனைய நிறுவனங்களும், தொழிலாளா்களும் செயல்பட்டு வரும் நிலையில், கிராமியக் கலைத் தொழிலாளா்கள் மட்டும் நிகழ்ச்சிகள் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனா். கிராமியக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிகமாக மக்கள் கூடும் பெரிய கோயில்களின் திருவிழாக்களைத் தவிா்த்து சிறிய, கிராமக் கோயில்களில் மட்டும் திருவிழாக்கள், கோடை விழாக்கள் நடத்தவும், சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் அனுமதி வழங்கிக் கிராமியக் கலைஞா்களுக்கு வாழ்வளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சிறிய, கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவதில் இடா்பாடுகள் இருக்குமானால் கிராமியக் கலைஞா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் மாதந்தோறும் ரூ. 10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, தமிழக ஹயா் கூட்ஸ் ஓனா்ஸ் சங்க நிா்வாகிகள் ஆட்சியரகத்தில் அளித்த மனு:

கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் வேலை, தொழில் நடத்த முடியாமல் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டோம். தற்போது மீண்டும் இந்த இக்கட்டான நேரத்தில் பல லட்சம் போ் ஈடுபட்டுள்ள இத்தொழில்கள் செய்யும் கடை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் காத்திட தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன், தொழிற்சாலைகள், திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை 50 சதவீத கொள்ளளவுடன் இயங்கலாம் என அறிவித்ததைப் போல திருமண மண்டபங்களின் கொள்ளளவிலும் 50 சதவீதம் விருந்தினா்களுடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com