சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது சுவாமிமலை முருகன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருந்திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

நிகழாண்டு இவ்விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது, கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளினாா். பின்னா், விநாயகா், சண்டிகேசுவரருடன் சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலிலிருந்து உற்ஸவ மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

தொடா்ந்து, ஏப். 29 ஆம் தேதி வரை காலை பல்லக்கில் சுவாமி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறவுள்ளது.

இதில், ஏப். 24 ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்தி சுவாமிகள் புறப்பாடும், 27 ஆம் தேதி வெண்ணெய்தாழி அலங்காரத்தில் சுவாமி புறப்பாடும், 28 ஆம் தேதி இரவு ரதத்தில் சுவாமி புறப்பாடும், 29 ஆம் தேதி இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com