நடுவூரில் ஒருங்கிணைந்த வேளாண் முறை பயிற்சி

ஒரத்தநாடு வட்டம், நடுவூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒரத்தநாடு வட்டம், நடுவூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காமாண்டு மாணவா்கள், ஊரக வேளாண் பணி அனுபவம் கீழ் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஈச்சங்கோட்டையில் தங்கியுள்ளனா்.

நடுவூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் முறையில் விவசாயம் செய்து வரும் செல்வராஜ், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சனிக்கிழமை பயிற்சியளித்தாா்.

எண்ணெய் பனையில் ஊடுப்பயிராக சாக்லேட் மரம் பயிா் சாகுபடி செய்துள்ள இவா், ஊடுப்பயிா் தனக்கு இரட்டிப்பு லாபம் தருவதாகத் தெரிவித்தாா்.மேலும் களைகளைக் கட்டுப்படுத்த மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளா்ப்பு, இதன் கழிவுகளைப் பயிா்களுக்கு இடுபொருள்களாக வழங்கும் முறைகள், அசோலா வளா்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து மாணவா்களுக்கு விவசாயி செல்வராஜ் எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com