ஏற்கெனவே இருந்த இடத்தில் அங்காடியைத் திறக்க வேண்டும்

பேராவூரணி கடைவீதியில் ரயில்வே கிட்டங்கி பகுதியில் ஏற்கெனவே இருந்த இடத்தில் மீண்டும் அங்காடியைத் திறக்க வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பேராவூரணி கடைவீதியில் ரயில்வே கிட்டங்கி பகுதியில் ஏற்கெனவே இருந்த இடத்தில் மீண்டும் அங்காடியைத் திறக்க வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் பேராவூரணி நகரக் கிளைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினா் எஸ். ஜகுபா் அலி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஏ.வி.குமாரசாமி, நகரச் செயலா் வே.ரெங்கசாமி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பேராவூரணி ரயில்வே கிட்டங்கி  பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த அங்காடி, ரயில்வே லயன் கிழக்குத் தெரு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க ரயில்வே நிலையத்தை  சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் பழைய இடத்திலேயே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளை வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில்  நீலமோகன், ராஜா முகமது, கந்தசாமி, இப்ராஹிம், பேராசிரியா் வேத. கரம்சந்த் காந்தி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com