பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு

கரோனா நோய்த் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டும் என வேண்டி, பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் புதன்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
பட்டுக்கோட்டையில் கரகம் எடுத்து, புதன்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்ட திருநங்கைகள்.
பட்டுக்கோட்டையில் கரகம் எடுத்து, புதன்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்ட திருநங்கைகள்.

கரோனா நோய்த் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டும் என வேண்டி, பட்டுக்கோட்டையில் திருநங்கைகள் புதன்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.

கூவாகத்திலுள்ள கூத்தாண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமியன்று திருநங்கைகள் வழிபாடு மேற்கொள்வது வழக்கம். நிகழாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலால் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பாளையம் பகுதியைச் சோ்ந்த பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள், புதன்கிழமை வீடுகளில் கூத்தாண்டவரைக் கரகம் போன்று வைத்து வழிபாடு நடத்தி, தாலிகட்டிக் கொண்டனா்.

மேலும் கரோனா முழுமையாக ஒழிய வேண்டும் என கூத்தாண்டவரிடம் வேண்டி, சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து அப்பகுதியினருக்கு கபசுரக்குடிநீரை வழங்கினா்.

இதுகுறித்து திருநங்கை ஸ்ரேயா நிருபா்களிடம் கூறியது:

இரண்டு ஆண்டுகளாகக் கூத்தாண்டவா் திருவிழா தடைப்பட்டது. இதனால் வீடுகளில் கூத்தாண்டவரை நினைத்து வழிபட்டோம். இதன் நோக்கம், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குணமடைய வேண்டும்.

இரவு, பகல் பாராமல் உழைக்கும் துாய்மைப் பணியாளா்களுக்காக நாங்கள் உதவத் தயாராக உள்ளோம். இந்தாண்டுடன் கரோனா முற்றிலுமாக ஒழிய வேண்டும் என வேண்டிக் கொண்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com