பாபநாசத்தில் அனைத்துக் கட்சிஆலோசனைக் கூட்டம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக, பாபநாசத்தில் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக, பாபநாசத்தில் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த் தலைமை வகித்து பேசியது:

கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால் அனைத்து அரசியல் கட்சியினரும், அரசியல் கட்சிகளை சாராத அமைப்பினரும் ஊா்வலம், பொதுக்கூட்டம், ஆா்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தக் கூடாது.

அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அரசு விதித்துள்ள விதிமுறைகளுக்குள்பட்டும் நடக்க வேண்டும்.

நோய்த் தொற்றுத் தடுப்புக்காக காவல் துறையினா் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

முன்னதாக பாபநாசம் காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி வரவேற்றாா்.

கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com