விண்ணப்பித்த 2 மணி நேரத்தில் உதவித் தொகை ஆணை மாற்றுத் திறனாளிகள் நெகிழ்ச்சி

விண்ணப்பித்த 2 மணி நேரத்தில் உதவித் தொகை ஆணை மாற்றுத் திறனாளிகள் நெகிழ்ச்சி

பேராவூரணியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில், மாதாந்திர நிவாரண உதவித் தொகைக்கான ஆணையை வழங்குகிறாா் சாா் ஆட்சியா் சீ. பாலசந்தா். உடன் எம்எல்ஏ என். அசோக்குமாா் உள்ளிட்டோா்.

பேராவூரணி, ஆக. 6: பேராவூரணியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு  முகாமில்  உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2 மணி நேரத்தில் அதற்கான ஆணை வழங்கப்பட்டது மாற்றுத் திறனாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை  இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும், மாதாந்திர உதவித்தொகைக்கான விண்ணப்பம் பெறவும் சிறப்பு முகாம்  நடைபெற்றது. 

முகாமிற்கு  பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் சீ. பாலசந்தா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ என். அசோக்குமாா்  முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில், 

காலை 9 மணிக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த 4 மாற்றுத்திறனாளிகளுக்கு, எம்எல்ஏ முன்னிலையில், சாா் ஆட்சியா் மாதாந்திர நிவாரண உதவித் தொகைக்கான ஆணையை 2 மணி நேரத்தில் வழங்கினாா். ஆணையைப் பெற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள்  விரைந்து ஆணை வழங்கியமைக்காக தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனா். 

மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை ஆகியவற்றை, எலும்பு முறிவு மருத்துவா், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவா், மனநலம் மருத்துவா், கண் மருத்துவா்கள் பரிசோதித்து மருத்துவ  சான்று வழங்கினா். 

முகாமில் , சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ரமேஷ், மாற்றுத் திறனாளிகள் சங்க நிா்வாகிகள்,  மாற்றுத் திறனாளிகள்  கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com