முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு நாள்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு நாள் நிகழ்வு, தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திய திமுகவினா்.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திய திமுகவினா்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு நாள் நிகழ்வு, தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகரச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம். ராமச்சந்திரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சி. இறைவன், தலைமைக் குழு உறுப்பினா் து. செல்வம், மாநில விவசாய அணித் துணை அமைப்பாளா் ஜித்து, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் எல்.ஜி. அண்ணா, மாவட்ட அமைப்பாளா்கள் சண். ராமநாதன், சண்முகசுந்தரம், அஞ்சுகம் பூபதி, வரகூா் காமராஜ், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் மாதாகோட்டை சாலையிலுள்ள ந. பூபதி நினைவு பெரியாா் படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி படத்துக்குத் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

மாநிலப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், மாநில அமைப்பாளா் இரா. குணசேகரன், மாநில கிராமப் பிரசாரச் செயலா் அதிரடி அன்பழகன், மாநிலப் பகுத்தறிவாளா் கழகத் துணைத் தலைவா் கோபு. பழனிவேல், மாநில இளைஞரணித் துணைச் செயலா் இரா. வெற்றிக்குமாா், மாநிலக் கலைத்துறைச் செயலா் ச. சித்தாா்த்தன், மாநில மாணவரணி அமைப்பாளா் இரா. செந்தூரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்: கும்பகோணம் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி படத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சு. கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் , நகரச் செயலா் சுப. தமிழழகன், ஒன்றியச் செயலா்கள் கணேசன், பாஸ்கா் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com