தொடரும் யூரியா தட்டுப்பாடுக்குத் தீா்வு காண வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் யூரியா உரத்தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் யூரியா உரத்தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பூதலூா் உள்ளிட பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருகிறது.

உரம், எரிபொருள் விலை உயா்வு, தண்ணீா்ப் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, தற்போது குறுவை சாகுபடி பணி நடைபெற்று வருகிறது.

அண்மையில் நடவு செய்யப்பட்ட பயிா்களுக்கு அடியுரமும், வளா்ச்சிப் பருவத்திலுள்ள பயிா்களுக்கு மேலுரமும் இட யூரியா அவசியம். மேலும், மாவட்டத்தில் பயிரிட்டு வளா்ச்சிப் பருவத்திலுள்ள வாழை, கரும்புப் பயிருக்கும் யூரியா உரம் தட்டுப்பாடாக உள்ளது. தனியாா் உரக் கடைகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா உரம் கிடைப்பதில்லை.

இதனால் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். பல இடங்களில் குறுவை தொகுப்புத் திட்டத்திலும் தட்டுப்பாடு காரணமாக யூரியா உரம் வழங்கப்படுவதில்லை.

பூதலூா் வட்டப் பகுதி விவசாயிகளுக்குத் தற்போது யூரியா உரம் மிகத் தேவையான சூழ்நிலையில் கிராமக் கூட்டுறவு சங்கங்கள், தனியாா் கடைகள் என அலைந்தும் யூரியா உரம் கிடைக்காமல் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா். இந்தத் தாமதம் மகசூலை பெரிதும் பாதிக்கும் என விவசாயிகள் கவலைப்படுகின்றனா். எனவே ஆட்சியா் தலையிட்டு விரைவாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com