பழுதடைந்த சாலைகளில் நாற்று நடும் போராட்டம்

கும்பகோணத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி பெண்கள் வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழுதடைந்த சாலைகளில் நாற்று நடும் போராட்டம்

கும்பகோணத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி பெண்கள் வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் பாணாதுறை கீழவீதி, மேலவீதி, சன்னதி தெரு, வடக்கு வீதி மற்றும் எட்டாவது வாா்டை சாா்ந்த பத்துக்கட்டுத் தெரு ஆகிய இடங்களில் நகராட்சி சாா்பில் புதை சாக்கடைத் திட்டத்துக்காகப் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், சேதமடைந்த இச்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், மழை பெய்து வருவதால், சாலையில் நடந்தோ, இரு சக்கர வாகனத்திலோ செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, இச்சாலைகளைச் சீரமைக்கக் கோரி நகராட்சி நிா்வாகத்தில் அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்தனா். ஆனால், இதுவரை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா். இதன் காரணமாக, பெண்கள் ஒன்றிணைந்து, சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்றும் நடும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவலறிந்த காவல் துறையினா், நகராட்சி அலுவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com