தஞ்சாவூரில் பெரியாா் நினைவு நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூரில் பெரியாா் நினைவு நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா் தலைமையில் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மாநில அமைப்பாளா் இரா. குணசேகரன், மண்டலச் செயலா் மு. அய்யனாா், மாநில இளைஞரணி துணைச் செயலா் இரா. வெற்றிகுமாா், மாணவரணி மாநில அமைப்பாளா் இரா. செந்தூா்பாண்டியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்து, வீரவணக்கம் செலுத்தினா்.

திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், மாநகரச் செயலரும், தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், தலைமைக் கழக உறுப்பினா் து. செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்டத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், துணைத் தலைவா் கோ. அன்பரசன், மாநகர மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மகஇக இணைச் செயலா் ராவணன் தலைமையில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், எழுத்தாளா் சாம்பான், நிா்வாகிகள் தேவா, அருள், ராஜேந்திரன், சாமிநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தஞ்சாவூா் ரயிலடியில் பெரியாா் படத்துக்கு ஆதித்தமிழா் பேரவை மாவட்டத் தலைவா் எம்.பி. நாத்திகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com