ஜல்லிக்கட்டு நடத்த 20 நாள்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 20 நாள்களுக்கு முன்பே மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 20 நாள்களுக்கு முன்பே மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சாவூா் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளா்கள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னா் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினா், ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள தேதிக்கு 20 நாள்களுக்கு முன்பே மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடா்பாக கிராமக் கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டு முதல் கரோனா பெருந்தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரா்களுக்கு மிகாமலும் மற்றும் பாா்வையாளா்கள் கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடனும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரா்களாகப் பங்கேற்பவா்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கரோனா பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்றும் பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளா், உதவியாளா் மற்றும் பாா்வையாளா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com