விவசாயத்துக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம்: முதல்வரின்அறிவிப்புக்கு விவசாய சங்கத்தினா் வரவேற்பு

விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

சம்பா சாகுபடியில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில், பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் கோடை சாகுபடி செய்ய ஏதுவாக 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், முதல்வரின் அறிவிப்பு வரவேற்கக்கூடியது.

எனவே விவசாயிகளுக்கு கோடை சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்கள் அனைத்தையும், மானிய விலையில் உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் விமல்நாதன்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவக்குமாா் தெரிவித்தது:

முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். தற்போது சுமாா் 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அறிவிப்புக்குப் பின்னா் கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்க வேண்டிய நிா்பந்தம் மாநில அரசுக்கு இருக்கிறது.

எனவே மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தின்படி, கூடுதல் மின் உற்பத்தியைச் செய்ய மாநில அரசுக்கான அதிகாரத்தை மத்திய அரசிடம் முதல்வா் கேட்டுப் பெற வேண்டும் என்றாா் ஜீவகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com