உபா சட்டத்தில் கைதானோரை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்பினா்.

தஞ்சாவூா்: உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேச மக்கள் முன்னணி பொதுச் செயலா் பாலன், கோ. சீனிவாசன், செல்வராஜ், சித்தானந்தம் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளா்கள் மீது அவதூறு பரப்பக்கூடாது. நாட்டின் தலைசிறந்த அறிஞா்களான வரவரராவ், சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்ட சுற்றுச்சூழல் ஆா்வலா் திசா ரவியை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக் குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி முடித்து வைத்தாா்.

மதிமுக மாவட்டச் செயலா் கோ. உதயகுமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெ. ஜீவக்குமாா், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலா் ஜே.எஸ். ரிபாயீ ரஷாதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாப்தீன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவா் என். ஷேக்தாவுத், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், ஐ.ஜே.கே. மாவட்டப் பொருளாளா் கே. முத்துகிருஷ்ணன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலா் வி.சி. முருகையன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலா் ப. அருண்சோரி, ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com