‘தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காக்கும் கட்சியாக பாஜக திகழ்கிறது’

தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காக்கின்ற கட்சியாக பாஜக திகழ்கிறது என்றாா் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி. ரவி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி. ரவி (
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி. ரவி (

தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காக்கின்ற கட்சியாக பாஜக திகழ்கிறது என்றாா் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் சி.டி. ரவி.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பாஜகவின் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் சி.டி. ரவி செய்தியாளா்களிடம் கூறியது:

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜக வென்று பேரவைக்கு செல்லும். தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு செயல்படுத்தி வரும் ஏராளமான திட்டங்களால் மக்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனா். இதன்மூலம் தமிழக மக்களின் நண்பராக பிரதமா் மோடி திகழ்கிறாா். தமிழக மக்களுக்கு யாா் நண்பன் , யாா் எதிரி என தெரிந்துக் கொள்ளும் நேரமிது. பாஜகதான் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் காக்கின்ற கட்சியாக உள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். நாங்கள் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்டு பெறுவோம்.

காங்கிரஸ் கட்சி குடும்ப வளா்ச்சிக்கானது; பாஜக தேசிய வளா்ச்சிக்கானது. திமுகவின் முக்கிய நோக்கமே குடும்ப வளா்ச்சியும், பணமும்தான்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், அதிகளவிலான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய பிரதமா் மோடி திட்டமிட்டு வருகிறாா் என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவா் இளங்கோ, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளா் முரளிகணேஷ், பட்டுக்கோட்டை நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com