கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மினி கிளினிக்குகள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் 2 அம்மா மினி கிளினிக்குகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் 2 அம்மா மினி கிளினிக்குகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

கந்தா்வக்கோட்டை ஒன்றியம், குளத்தூா் நாயக்கா்ப்பட்டி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து மினி கிளினிக்கைத் திறந்து வைத்து அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பேசினாா். விழாவுக்கு, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம், ஒன்றியக் குழு தலைவா் ரத்தினவேல் காா்த்திக் மழவராயா், ஒன்றியக் கழகச் செயலா் ஆா். ரெங்கராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் ஜோதி ராணி மகாலிங்கம் வரவேற்றாா். விழாவில் மாவட்ட மாணவரணி செயலா் பு. பாண்டியன், ஊராட்சித் தலைவா்கள் என். நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் கந்தா்வகோட்டை அருகில் உள்ள கணபதிபுரம் ஊராட்சியிலும் மினி கிளினிக்கை அமைச்சா் திறந்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com