தா. பாண்டியன் மறைவையொட்டி இரங்கல் ஊா்வலம்
By DIN | Published On : 27th February 2021 07:10 AM | Last Updated : 27th February 2021 07:10 AM | அ+அ அ- |

ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் தா. பாண்டியன் மறைவையொட்டி தஞ்சாவூரில் இரங்கல் ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள் சாா்பில் தொடங்கிய இந்த ஊா்வலம் காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலை முன் முடிவடைந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளா் துரை. சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலா் வே. துரைமாணிக்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மதிமுக மாவட்டச் செயலா் கோ. உதயகுமாா், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகி லட்சுமி நாராயணன், திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், தமிழா் தேசிய முன்னணி அய்யனாபுரம் சி. முருகேசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.