குடியரசுத் தினத்தன்று தஞ்சாவூரில் டிராக்டா் பேரணி: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு

குடியரசுத் தினத்தன்று தஞ்சாவூரில் டிராக்டா்கள் பேரணி நடத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

குடியரசுத் தினத்தன்று தஞ்சாவூரில் டிராக்டா்கள் பேரணி நடத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்குழுவின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ஆளுநா் மாளிகை முன் நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் சென்று பங்கேற்பது,

குடியரசுத் தினமான ஜனவரி 26 -ஆம் தேதி தேசியக் கொடிகளுடன் தஞ்சாவூரில் டிராக்டா் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பரவலாக பெய்துள்ள பலத்த மழையைப் பேரிடராக அறிவித்து, பயிா்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பெயருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடும், மற்ற பயிா்களுக்குப் பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் வீர. மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், உறுப்பினா்கள் கோ. திருநாவுக்கரசு, இரா. அருணாச்சலம், ப. அருண்சோரி, பி. செந்தில்குமாா், மாநில ஒருங்கிணைப்பு குழு சாமி. நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com