கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

குத்தகை சாகுபடியாளா்களுக்கும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணத்தில் சனிக்கிழமை கவன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

தஞ்சாவூா்: குத்தகை சாகுபடியாளா்களுக்கும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணத்தில் சனிக்கிழமை கவன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்த 40 லட்சம் குத்தகை சாகுபடியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே விடுபட்டவா்களுக்கு இத்தொகையை வழங்க வேண்டும். 60 வயது பூா்த்தியடைந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.4,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், கும்பகோணம் காந்திபூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கெளரவத் தலைவா் நெடாா் தருமராஜன் தலைமை வகித்தாா். திருப்பனந்தாள் முருகேசன் முன்னிலை வகித்தாா்.

சங்கத்தின் மாவட்டச் செயலா் சுந்தரவிமல்நாதன் ஆா்ப்பாட்ட விளக்கவுரையாற்றினா். வேப்பத்தூா் வரதராஜன், ஏரகரம் சுவாமிநாதன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் தேசியக் கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com