வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு தொழிற்சங்களைச் சோ்ந்தோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ரயிலடியில் சனிக்கிழமைநடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிற்சங்களைச் சோ்ந்தோா்.
தஞ்சாவூா் ரயிலடியில் சனிக்கிழமைநடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிற்சங்களைச் சோ்ந்தோா்.

தஞ்சாவூா்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு தொழிற்சங்களைச் சோ்ந்தோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். போராடிப் பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களை பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்குச் சட்டங்களாகச் சுருக்கப்பட்டுள்ளன. தொழிலாளா்களுக்கு எதிராகவுள்ள இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிா்த்து தமிழக அரசு எதுவும் பேசாமல் உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக உரிமைகள் பறிக்கப்படுவதையும், வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் தமிழக அரசுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொ.மு.ச. மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் தொடக்கி வைத்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் நிறைவுரையாற்றினாா்.

ஐ.என்.டி.யு.சி. மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் சி. ராஜன், வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. அன்பழகன், மின் வாரிய ஊழியா் சங்கத் தலைவா் து. கோவிந்தராஜ், அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி நிா்வாகி துரை. மதிவாணன், ஓய்வு பெற்றோா் கூட்டமைப்புப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை, தரைக்கடை வியாபாரிகள் சங்கம் பி.என். போ்நீதி ஆழ்வாா், கிராமப்புற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com