பெட்ரோலியப் பொருள்களின் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மல்லிப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மல்லிப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
மல்லிப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மல்லிப்பட்டினத்தில் மீன்பிடித் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். , மீனவா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக மாதந்தோறும் ரூ 7,500 மற்றும் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும்.

மீனவா் நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மீனவா்களுக்கு கடலில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மீன்பிடிப்பதற்கான பெட்ரோல், டீசலை கட்டுப்பாடின்றி மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மல்லிப்பட்டினம் மீன்வளத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மீன்பிடித் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலா் எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முறைசாராத் தொழிலாளா்  சங்க மாவட்டச் செயலா் பி.என்.போ்நீதிஆழ்வாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் ஆா்.எஸ். வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

ஆா்ப்பாட்டத்தில்  மாட்டு வண்டித் தொழிலாளா்  சங்க நிா்வாகிகள் சோமசுந்தரம், அலெக்சாண்டா், சிஐடியு மாவட்டச் செயலா் சி.ஜெயபால், மீன்பிடித் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் குத்புதீன், பொருளாளா் கா்த்தா்  உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com