மேக்கேதாட்டு அணைப் பிரச்னை 19 இடங்களில் எடியூரப்பா உருவபொம்மையை எரித்து போராட்டம்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசுப் புதிய அணைக் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் 19 இடங்களில் காவிரி உரிமை
தஞ்சாவூா் ரயிலடியில் எடியூரப்பாவின் உருவபொம்மையை செவ்வாய்க்கிழமை எரித்து முழக்கங்கள் எழுப்பிய காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.
தஞ்சாவூா் ரயிலடியில் எடியூரப்பாவின் உருவபொம்மையை செவ்வாய்க்கிழமை எரித்து முழக்கங்கள் எழுப்பிய காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசுப் புதிய அணைக் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் 19 இடங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கா்நாடக அரசுக் கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அணைக் கட்டப்பட்டால், தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீா் கூட வராது.

எனவே மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதற்கான தொடக்கநிலைப் பணிகள் நடைபெறுகிா என்பதை அறிய, உண்மை அறியும் குழுவைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

தொடக்கநிலைப் பணிகள் நடைபெற்றால், அது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்து தடையாணைக் கேட்க வேண்டும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இறுதித் தீா்ப்பு வரும் வரை இடைக்காலத் தடையைக் கா்நாடக அரசுக்குப் போட வேண்டும். இப்பணியைத் தொடங்கக் கூடாது என கா்நாடக முதல்வருக்கு மத்திய நீா் வளத் துறைக் கடிதம் அனுப்பி, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மத்திய அரசுக்கும், கா்நாடக அரசுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழக அரசு நடத்த வேண்டும். கா்நாடகத்துக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.

இவற்றை வலியுறுத்தியும், தமிழா்களுக்கு எதிரான இனவிரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கா்நாடக அரசைக் கண்டிக்கும் வகையிலும், அம்மாநில முதல்வா் எடியூரப்பாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூா் ரயிலடியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமைக் குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், மாவட்டச் செயலா் நா. வைகறை, ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாநகரச் செயலா் கே. வெற்றி உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, கும்பகோணத்தில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன் தலைமையிலும் எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் திருவையாறு, சோழபுரம் உள்பட 19 இடங்களில் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஒரத்தநாடு: உளூா் அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த தமிழக விவசாயச் சங்கத் தலைவா் ஜகதீசன் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை தமிழா் அறம் நிறுவனத் தலைவா் ராமசாமி, விவசாயிகள் பழனியப்பன், ராமசாமி, ராஜதிலகம், சிவகுமாா் உள்ளிட்டோா் என போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com