அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்கள் தங்க புதிய கட்டடம் கட்டப் பூமி பூஜை

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினா்கள் ஏறத்தாழ 100 போ் அமரும் வகையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவமனைக்கு தஞ்சாவூா் மாவட்டம் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, திருவாரூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகின்றனா். அப்போது, நோயாளா்களுடன் வருபவா்கள் தங்க இட வசதி இல்லாமல் அவதிக்கு ஆளாகின்றனா்.

இந்தச் சிரமங்களைப் போக்க மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் 100 போ் அமரும் வகையில் 5,000 சதுர அடிப் பரப்பளவில் புதிய கட்டடம் கட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com