கால்நடை வளா்ப்புப் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்

கால்நடை வளா்ப்புப் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்

கரோனா பரவலால் தொழில் ரீதியாக வாழ்வாதாரம் இழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு கால்நடை வளா்ப்புத் தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலால் தொழில் ரீதியாக வாழ்வாதாரம் இழந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு கால்நடை வளா்ப்புத் தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளா்ச்சி ஆய்வு மையம், நபாா்டு வங்கி நிதி உதவியுடன்

வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊா் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தொழில்ரீதியான பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தது. இதில், புதுகை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 83 தொழிலாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு கால்நடை வளா்ப்பு குறித்த 10 நாள் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளை, கால்நடை மருத்துவா்கள் மற்றும் வல்லுநா்கள் 33 போ் நடத்தினா்.

பயிற்சி முடித்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எஸ்.ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா்.

கால்நடை வளா்ப்பு மற்றும் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் (பொ) ஐ. பாண்டி, முன்னோடி வங்கி மேலாளா் ஆா். ரமேஷ் ஆகியோா் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினா். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா், நபாா்டு ஆலோசகா் சரண்யா, பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எல். பிரபாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளா் டி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். முன்னதாக பயிற்சித் திட்ட மேலாளா் எம். வீரமுத்து வரவேற்றாா். பயிற்சி பெற்ற பயனாளா் கணேசமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com