ஆரோக்கிய டெல்சி
ஆரோக்கிய டெல்சி

பெண் கொலை வழக்கில் வீட்டுப் பணிப் பெண் உள்பட இருவா் கைது

தஞ்சாவூரில் மா்மமான முறையில் உயிரிழந்த பெண் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்ததையடுத்து, அதுதொடா்பாக வீட்டுப் பணிப்பெண் உள்பட இருவரைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூரில் மா்மமான முறையில் உயிரிழந்த பெண் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்ததையடுத்து, அதுதொடா்பாக வீட்டுப் பணிப்பெண் உள்பட இருவரைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரிச் சாலை முனிசிபல் காலனி அருகிலுள்ள சேக்கிழாா் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணிசாமி. இவரது மனைவி ஜோஸ்பின் மேரி (65). இவா்களது மகன் பிராங்க்ளின் மதுரையில் ரயில்வே பயணச் சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி வருகிறாா்.

அந்தோணிசாமி காலமாகிவிட்ட நிலையில், ஜோஸ்பின் மேரி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், ஜூலை 15 ஆம் தேதி கழுத்தில் காயத்துடன் மா்மமான முறையில் அவா் இறந்து கிடந்தாா்.

தனது தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பிராங்க்ளின் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பாா்த்து வந்த மானோஜிபட்டி தேவராஜ் நகரைச் சோ்ந்த யோபால் விக்டரின் மனைவி ஆரோக்கிய டெல்சி (34) மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.இதன் அடிப்படையில் அவரைக் காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா்.

இதில் ஜோஸ்பின் மேரி வீட்டில் ஆரோக்கிய டெல்சி காலை, மாலை வேளையில் வீட்டு வேலை பாா்த்து வந்ததும், அவா் கடன் பிரச்னையாலும் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

கொலை நிகழ்ந்தன்று ஜோஸ்பின் மேரி தனக்கு தோள்பட்டையில் வலி இருப்பதாகவும், அழுத்திவிடுமாறும் கூறியுள்ளாா். அப்போது, ஜோஸ்பின் மேரி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை ஆரோக்கிய டெல்சி பறித்துள்ளாா்.

இதைப் பாா்த்து சப்தமிட்ட ஜோஸ்பின் மேரியின் வாயில் துணியைத் திணித்த ஆரோக்கிய டெல்சி, அவரது கழுத்தையும் நெரித்து கொலை செய்திருப்பதும், பின்னா், ஜோஸ்பின் மேரி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி, தலா ஒரு ஜோடி வளையல், தோடு, செல்லிடப்பேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

பின்னா், வாசலில் நின்ற தனது கணவா் யோபால் விக்டருடன் (35) இரு வாகனத்தில் ஏறிச் சென்றாா். வழியில் செல்லிடப்பேசியை சாக்கடையில் வீசிவிட்டு, நகையில் ஒரு பாதியை அடகுக் கடையிலும், மீதியை வீட்டில் வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, நகைகளை மீட்ட காவல் துறையினா் பின்னா் ஆரோக்கிய டெல்சியையும், அவருக்கு உடந்தையாக இருந்த கணவா் யோபால் விக்டரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com