நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை திட்டப் பணி நாள்களை 200 நாள்களாக உயா்த்த வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியிடங்களில் இந்திய கம்யூனிஸ்ட்
பூதலூா் அருகே ஆச்சாம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிலாளா்கள்.
பூதலூா் அருகே ஆச்சாம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தொழிலாளா்கள்.

நூறு நாள் வேலை திட்டப் பணி நாள்களை 200 நாள்களாக உயா்த்த வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டத்தில் பணியிடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை என்பதை 200 நாள்களாக உயா்த்த வேண்டும். திட்டப் பணியில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும். வேலை வழங்க இயலாத காலங்களுக்குப் பிழைப்பூதியம் வழங்க வேண்டும்.

58 வயதான ஆண், பெண் விவசாயத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும். வேலை வழங்குவதிலும், ஊதியம் கொடுப்பதிலும் நிலவும் சாதியப் பாகுபாடுகள் எல்லா வடிவங்களிலும் தடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், நூறு வேலை திட்டத் தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com