உய்யகொண்டான், கட்டளை வாய்க்கால்களில் தண்ணீா் விட வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள உய்யகொண்டான் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் பாசனத்துக்குத் தண்ணீா் விட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள உய்யகொண்டான் நீட்டிப்பு மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களில் பாசனத்துக்குத் தண்ணீா் விட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

நிகழாண்டு பாசனத்துக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் சாகுபடிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், கல்லணைக்கு மிக அருகில் இருந்தும், பூதலூா் வட்டம் செங்கிப்பட்டி பகுதியின் நீா் ஆதாரமாக விளங்கும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால்களில் இன்னும் நீா் திறக்கப்படவில்லை.

உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலுக்கு நீா் வழங்கும் திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான் கோட்டை ஏரி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. எனவே, உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் நிகழாண்டு பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com