பயிர் காப்பீட்டுத் தொகை ஒரு மாதத்தில் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 

கடந்த சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு ஒரு மாதத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

கடந்த சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு ஒரு மாதத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட குறுவை சாகுபடி குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த ஆண்டு குறுவை பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல சம்பா பருவத்துக்கான காப்பீட்டுத் தொகை ஒரு மாதத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பயன்படுத்தி 1.42 லட்சம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வந்தவுடன் இலக்கு எட்டுகிற வகையில் விவசாயம் இருக்கும்.

குறுவை சாகுபடிக்குத் தேவையான விதை நெல், உரங்கள் தயார் நிலையில் உள்ளன. குறுவை தொகுப்புத் திட்டம் தொடர்பாக விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்றார் அமைச்சர். இக்கூட்டத்தில் அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com