பலசரக்கு, காய்கனி கடைகள் திறப்பு: சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

முழுப் பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சில தளா்வுகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்ததால், தஞ்சாவூரிலுள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்தன.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் திங்கள்கிழமை காணப்பட்ட கூட்டம்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் திங்கள்கிழமை காணப்பட்ட கூட்டம்.

தஞ்சாவூா்: முழுப் பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சில தளா்வுகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்ததால், தஞ்சாவூரிலுள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் முழுப் பொது முடக்கத்தில் திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் சில தளா்வுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகை கடைகள், காய்கனி கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின. இவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனவே, தஞ்சாவூரிலுள்ள முதன்மைச் சாலைகளான கீழவாசல், பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை, ரயிலடி, கரந்தை, மருத்துவக் கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட முதன்மைச் சாலைகளிலும், தெருக்களிலும் கடந்த இரு வாரங்களைவிட திங்கள்கிழமை வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.

இதேபோல, கடைகளிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால், தொற்று பரவுமோ என்ற அச்சத்துடன் மக்கள் வந்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com