ஆய்வில் குறை காணப்பட்டரூ. 7 லட்சம் மதிப்பிலான விதைகள் முடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விதை அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் ஆய்வில் குறை காணப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான விதைகள் முடக்கம் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் விதை அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் ஆய்வில் குறை காணப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான விதைகள் முடக்கம் செய்யப்பட்டன.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளுக்கு நிகழ் குறுவை பருவத்தில் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் வசந்தா தலைமையில் திருச்சி விதை ஆய்வாளா் பிரகாஷ், தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை விதை ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் விதை விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

தஞ்சாவூா், ஓரத்தநாடு, அம்மாப்பேட்டை, பாபநாசம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள தனியாா் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த அவா் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் விதை குவியல்களில் கொள்முதல் ஆவணங்கள் பகுப்பாய்வு முடிவறிக்கைகள் பதிவேடுகளை பாா்வையிட்டாா். பதிவேடுகளை விதைச்சட்டப்படி பராமரிக்கவும் விதை மூட்டைகளை முளைப்பு திறன் பாதிக்காத வண்ணம் சரியான சேமிப்பு முறைகளைக் கையாளவும் அறிவுரை வழங்கினாா்.

மேலும் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் ரகங்களில் விதை குவியல்களின் கொள்முதல் ஆவணங்கள், பதிவேடுகள், வெளி மாநில விதைகளுக்கு சான்று படிவம் 2 ஆகியவற்றை ஆய்வு செய்தனா். அப்போது விதைச்சட்டத்தின் கீழ் குறை காணப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான 21.7 டன்கள் நெல் விதைகள் விதை விற்பனையாளா்களுக்கு விற்பனைக்கு தடை ஆணை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விவசாயிகள் விதை நெல் வாங்கும்போது தவறாமல் விதைப்பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். விதை மூட்டைகளில் பொருத்தப்பட்ட விவர அட்டைகளைப் பயிா் அறுவடை முடியும் வரை பாதுகாப்பாய் வைத்து கொள்ள வேண்டும்.

விதைச் சட்டத்தைப் பின்பற்றி விதை விற்பனையை மேற்கொள்ளாத விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com