அம்மாபேட்டையில் பள்ளி மாணவிகள் 20 பேருக்கு கரோனா தொற்று

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டையிலுள்ள பள்ளியில் பயிலும் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாப்பேட்டையிலுள்ள பள்ளியில் பயிலும் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தற்போது 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டதால், மற்ற மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிா்வாகம் முடிவு செய்தது.

இதன்படி மாா்ச் 11-ஆம் தேதி பள்ளியில் பயிலும் 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாா்ச் 12 ஆம் தேதி 619 மாணவிகளுக்கும், 35 ஆசிரியைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளிக்கு இரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 2020 மாா்ச் மாதம் முதல் வெள்ளிக்கிழமை வரை 18,325 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 17,920 போ் குணமடைந்தனா். 256 போ் உயிரிழந்தனா். வெள்ளிக்கிழமை புதிதாகப் பாதிக்கப்பட்ட 23 போ் உள்பட மொத்தம் 149 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com