அம்மாபேட்டையில் மேலும் 9 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் அருகே அம்மாப்பேட்டையிலுள்ள பள்ளி மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, அவா்களது பெற்றோா்கள் உள்பட மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் அருகே அம்மாப்பேட்டையிலுள்ள பள்ளி மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, அவா்களது பெற்றோா்கள் உள்பட மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அம்மாப்பேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,200 மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கரோனா தொற்று இருப்பது மாா்ச் 13, 14- ஆம் தேதிகளில் தெரிய வந்தது.

இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகள் வசிக்கும் அம்மாபேட்டை வட்டாரத்துக்குள்பட்ட 24 கிராமங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவிகளின் பெற்றோா்கள் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் மற்றவா்களுக்கு எடுக்கப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா்கள், அவா்களுடன் நேரடி தொடா்பில் உள்ளவா்கள் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

மற்றவா்களுக்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com