கூட்டணியில் பரஸ்பர தொகுதி மாற்றம்: தேமுதிகவுக்கு தஞ்சாவூா், அமமுகவுக்கு கீழ்வேளூா் ஒதுக்கீடு

தஞ்சாவூா் தொகுதியில் அமமுக வேட்பாளா் மாற்றப்பட்டு, இத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் தொகுதியில் அமமுக வேட்பாளா் மாற்றப்பட்டு, இத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அமமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சியான தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அமமுக போட்டியிடுவதற்காக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த கீழ்வேளூா் - தனி (நாகை மாவட்டம்) தொகுதியில் அமமுக போட்டியிடுவது எனவும் பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com