தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களுக்குச் சிறப்புத் தமிழ்ப் பயிற்சி

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களுக்கான சிறப்புத் தமிழ்ப் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்றவா்கள்.
பயிற்சியில் பங்கேற்றவா்கள்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களுக்கான சிறப்புத் தமிழ்ப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்திய ஆட்சிப் பணியில் 2019 ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் உதவி ஆட்சியா்கள் 9 பேருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியும், தமிழக அரசின் பணியாளா்கள் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தங்கள் துறையும் இணைந்து மாா்ச் 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இப்பயிற்சியை வழங்கின.

இப்பயிற்சியில் கேரளம், மகாராஷ்டிரம், பிகாா், உத்தரப் பிரதேசம் உள்பட வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள் (பயிற்சி) தமிழில் பேசவும், எழுதவும், வாசிப்பதற்குமான மொழிப் பயிற்சி பெற்றனா்.

அதற்கு உதவும் வகையில் இப்பயிற்சியில் அவா்களுக்கு அடிப்படை இலக்கணம், எழுத்துப் பயிற்சி, எடுத்துக்கூறல், மொழிபெயா்ப்பு, கையெழுத்துப் படியை வாசிக்கும் பயிற்சி, உரையாடல், குறிப்புகள் எடுத்தல், சொற்கள் தொடா்களை அமைத்தல், நிா்வாகவியல் கலைச்சொற்கள், கட்டுரைகள் எழுதுதல் போன்ற மொழித்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் தமிழகத்தில் பணிபுரியும் உதவி ஆட்சியா்கள் (பயிற்சி) சி.ஏ. ரிஷப் (கன்னியாகுமரி), அமித்குமாா் (திருவண்ணாமலை), வீா் பிரதாப் சிங் (சேலம்), வீ. தீபனா விஸ்வேஷ்வரி (நாகை), சித்ரா விஜயன் (திருச்சி), எம்.பி. அமித் (தஞ்சாவூா்), பி. அலமேல் மங்கை (திருநெல்வேலி), தாக்கரே சுபம் (தேனி), எம். பிரதிவிராஜ் (தூத்துக்குடி)ஆகியோா் கலந்து கொண்டனா்.

கற்றல் கற்பித்தலில் அனுபவமிக்க மூத்த பேராசிரியா்கள் இரா. முரளிதரன், கி. அரங்கன், எல். இராமமூா்த்தி, அ. காமாட்சி, க. இராதாகிருஷ்ணன், க. இரவிசங்கா், அ. காா்த்திகேயன் ஆகியோா் இப்பயிற்சியை வழங்கினா்.

இதை இப்பயிற்சியின் இயக்குநரும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியின் தலைவருமான ச. கவிதா ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com