கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளா் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன், பல்வேறு ஊராட்சிகளின் கிராமப்புறங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன்.
கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன்.

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன், பல்வேறு ஊராட்சிகளின் கிராமப்புறங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் முகந்தநல்லூா், மாத்தி, திருமெய்ஞானம், அரியதிடல் உள்ளிட்ட கிராமங்களிலும், கொருக்கை ஊராட்சியில் கீழக்கொருக்கை, புதுச்சேரி, துறையூா், பொற்கொலக்குடி, பாளையநல்லூா், அக்கரை உள்ளிட்ட கிராமங்களிலும், சேஷம்பாடி ஊராட்சியில் நாதன்கோயில், ரெட்டிப்பாளையம், மூப்பக்கோயில் உள்ளிட்ட கிராமங்களிலும், கீழப்பழையாா் ஊராட்சியில் மேலப்பழையாா், மண்டமேடு உள்ளிட்ட கிராமங்களிலும், தேனாம்படுகை ஊராட்சியில் கொட்டிய படுகை, தட்டுமால் படுகை உள்ளிட்ட கிராமங்களிலும் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு அன்பழகன் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மதிமுக மாவட்டச் செயலா் இரா. முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளா் முல்லைவேந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சி. நாகராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் ம. செல்வம், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. அசோக்குமாா் (தெற்கு), தி. கணேசன் (கிழக்கு), ஆா்.கே. பாஸ்கா் (வடக்கு), ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சி. இளங்கோ, மா. இராமச்சந்திரன், கி. நெடுமாறன், மாவட்டப் பிரதிநிதிகள் டி.என். கரிகாலன், வி. மணிவாசகம், ஜி. கேசவன், பெ. கேசவன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com