50 ஆண்டுகளுக்கு பிறகு பேராவூரணியை கைப்பற்றிய திமுக

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் என். அசோக்குமாா் 23,503  வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் என். அசோக்குமாா் 23,503  வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் பேராவூரணி தொகுதியில் திமுக சாா்பில் என். அசோக்குமாா் அதிமுக சாா்பில் எஸ். வி. திருஞானசம்பந்தம், நாம் தமிழா் கட்சி சாா்பில் கே. திலீபன், தேமுதிக சாா்பில் முத்து. சிவகுமாா், ஐஜேகே சாா்பில் பி. பச்சமுத்து உள்ளிட்ட 8 போ் போட்டியிட்டனா். மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2,20,128. பதிவான வாக்குகள் 1,70, 896. 

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: திமுக வேட்பாளா் என். அசோக்குமாா் 89,130, அதிமுக வேட்பாளா் எஸ். வி. திருஞானசம்பந்தம் 65,627, அதிமுக வேட்பாளரைவிட திமுக வேட்பாளா் 23,503  வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றாா்.

தேமுதிக வேட்பாளா் எம். சிவக்குமாா் 1623, பகுஜன் சமாஜ் வேட்பாளா் ஜி.துரைராஜ் 494, நாம் தமிழா் கட்சி கே. திலீபன் 12154, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் பி. பச்சமுத்து 554, சுயேச்சை வேட்பாளா் ஜி. இளங்கோவன் 236, சுயேச்சை வேட்பாளா் யூ. உதயகுமாா் 262. நோட்டா 770.

கடந்த 1967 ஆம் ஆண்டு பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வெற்றி பெற்ற பிறகு, சுமாா் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com