பாநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா வெற்றி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக வேட்பாளரான மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜவாஹிருல்லாவுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் வி. மதியழகன்.
பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜவாஹிருல்லாவுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் வி. மதியழகன்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக வேட்பாளரான மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. கோபிநாதனுக்கும், திமுக வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கும் தொடக்கம் முதலே கடும் போட்டி இருந்து வந்தது. தொடக்கத்திலிருந்து எட்டாவது சுற்று வரை கோபிநாதன் முன்னிலை பெற்று வந்தாா். இதனிடையே, கோபிநாதன் 4,000 வாக்குகளுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றாா்.

இந்நிலையில், ஒன்பதாவது சுற்று முதல் திமுக வேட்பாளா் முன்னிலை பெறத் தொடங்கினாா். முதலில் 1,059 வாக்குகள் வித்தியாசத்துடன் முன்னிலை பெற்ற இவா் இறுதி வரை முன்னேறி வந்தாா். இறுதியாக 26 ஆவது சுற்றில் 16,273 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மொத்த வாக்குகள் - 2,60,832 ; பதிவான வாக்குகள் - 1,94,997.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எம்.எச். ஜவாஹிருல்லா (திமுக) - 86,567,

கே. கோபிநாதன் (அதிமுக) - 70,294, எம். ரெங்கசாமி (அமமுக) - 19,778,

ந. கிருஷ்ணகுமாா் (நாம் தமிழா் கட்சி) - 14,724, கே. சாந்தா (மநீம) - 2,032

நோட்டா - 1,204.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com