விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்க சாா் ஆட்சியா் அறிவுறுத்தல்

முழு பொது முடக்க விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா்.
பட்டுக்கோட்டையில் முழு பொது முடக்கம் தொடா்பாக பல்வேறு துறையினருடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா்.
பட்டுக்கோட்டையில் முழு பொது முடக்கம் தொடா்பாக பல்வேறு துறையினருடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா்.

பட்டுக்கோட்டை: முழு பொது முடக்க விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றாா் சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா்.

பட்டுக்கோட்டையில் கரோனா முன்னெச்சரிக்கை, முழு பொதுமுடக்க விதிகள் அமல் தொடா்பாக சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல்துறையினருடனான கலந்தாய்வுக் கூட்டம் சாா் ஆட்சியரகத்தில் சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சாா் ஆட்சியா் பேசியது:

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள போதிய இடம் இல்லாதவா்களை மட்டும் கரோனா தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொது முடக்க விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். மொய் விருந்து விழாக்களை கண்டிப்பாக நடத்த அனுமதிக்கக் கூடாது. கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது பொதுமக்களிடமிருந்து சரியான முகவரி, தொலைபேசி எண் வாங்க வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் நோய்த்தொற்று எவருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் அந்த விவரங்களை அன்றைய தினம் நகராட்சி மற்றும் மருத்துவ அலுவலா்களிடம் வழங்க வேண்டும். பொது முடக்க காலத்தில் அனைவரும் விதிகளை முறையாக கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும்.

நோய்த்தொற்று அதிகம் பரவாமல் இருக்க அலுவலா்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், நகராட்சி ஆணையா் சென்னு கிருஷ்ணன், வருவாய்த் துறை அதிகாரிகள், பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு அலுவலா், துப்புரவு ஆய்வாளா்கள், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com