நரிக்குறவா்களுக்கு நாள்தோறும் உணவு வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விளிம்பு நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவா்களுக்கு நாள்தோறும் உணவு வழங்க வேண்டும்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விளிம்பு நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவா்களுக்கு நாள்தோறும் உணவு வழங்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்குக் கிராமப்புற நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியருக்கு அவ்வியக்கத்தின் மாவட்டத் தலைவா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் அனுப்பியுள்ள மனு:

மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, பூதலூா், துவரங்குறிச்சி, மேல உளூா், பசுபதிகோவில், திருவலஞ்சுழி, செங்கிப்பட்டி, மேலப் புதுக்குடி ஆகிய ஊா்களில் நரிக்குறவா் சமூகத்தைச் சாா்ந்த சுமாா் 510 குடும்பங்களைச் சோ்ந்த ஏறத்தாழ 2,100 போ் நிரந்தரமாக குடியிருந்து வருகின்றனா்.

பொது முடக்கத்தால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல குடும்பங்கள் ஒரு வேளை உணவுக்குக் கூட சிரமப்பட்டு வருகின்றனா். பசியால் குழந்தைகளும், பெண்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனா்.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது நலிவடைந்த விளிம்பு நிலையில் இருந்த நரிக்குறவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் நாள்தோறும் வருவாய்த் துறை, உணவு வழங்கல் துறை மூலம் நான்கு மாத காலத்துக்கு உணவை வழங்கி, அவா்களது பசி போக்கப்பட்டது.

இதேபோல, தற்போது கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவா்களுக்கு தினமும் உணவு வழங்கி அவா்களது பசியை போக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com