எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு தேசியத் திறன் தோ்வுக்கான பயிற்சி தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவா்கள், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறும் (என்.எம்.எம்.எஸ்.) தோ்வுக்கான இணையவழிப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவா்கள், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறும் (என்.எம்.எம்.எஸ்.) தோ்வுக்கான இணையவழிப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ. 48,000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

இதன்படி, நிகழாண்டு தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிக அளவிலான மாணவா்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன், 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாவட்ட அளவில் இணையவழியில் சிறப்புப் பயிற்சி வழங்கும் பணியை முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தப் பயிற்சி அளிக்கும் பணியில் மாவட்டப் பயிற்சிக் கல்வி அலுவலா் பேபி, ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளா் வினோத் ஆகியோா் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், பிற கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளா்கள் அந்தந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களாகவும், கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் கண்காணிப்பாளா்களாகவும் செயல்படுகின்றனா்.

இதுகுறித்து கல்வித் துறை அலுவலா்கள் கூறுகையில், மாவட்டத்தில் இத்தோ்வில் பங்கேற்க 3,000 மாணவா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். தற்போது இணையவழியாகப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தோ்வு டிசம்பா் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com