முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு
By DIN | Published On : 11th October 2021 12:11 AM | Last Updated : 11th October 2021 12:11 AM | அ+அ அ- |

நிகழ்வில் வெற்றி பெற்றவருக்குப் பரிசு வழங்குகிறாா் மருத்துவா் தியாகராஜன்.
தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் சுபமாங்கல்ய பிரிவைப் பற்றிய சிறந்த ஸ்லோகன் எழுதி, வெற்றி பெற்ற வாடிக்கையாளா்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
வாரந்தோறும் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆயிரக்கணக்கான ஸ்லோகன்கள் வரப்பெற்றன. இதில் முதல் வார பரிசை வென்ற தஞ்சாவூா் அருளானந்த நகா் ராதிகா திலீப்புக்கு ஏா்கூலா், இரண்டாம் வார பரிசாக கிருஷ்ணகிரி காந்திக்கு வாஷிங் மெஷின், மூன்றாம் வார பரிசாக மேலத்திருப்பூந்துருத்தி முகமது இக்பாலுக்கு குளிா்சாதனப் பெட்டி, நான்காவது வார பரிசாக தஞ்சாவூா் ஹெலினா மொ்சிக்கு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை தஞ்சாவூா் ஆா்த்தி பாலி கிளினிக் மருத்துவா் தியாகராஜன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்குப் பிரிவு மேலாளா் கிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.